இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்

இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்
வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!
ஜீவ பலியாக்குவோம்!

1. முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்
முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!
உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்! இனி..
ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்! – இளமையை

2. தள்ளாடும் முழங்காலை ஊன்றக்கட்டுவோம்
தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்
அறிவோடும் உணர்வோடும் பின் பற்றுவோம்! இனி..
உளமாற இயேசுவில் நாம் அன்பு கூருவோம் – இளமையை

3. பலிபடத்தனல் கொண்டு சிந்தையைத் தொடும்!
துதிபாடும் அனல்கொண்ட உள்ளம்தாரும்!
விழிவைத்து எதிர்நோக்கும் என்னைப்பாரும்! இனி..
பதிவாக உம்மில் நான் நிலைப்பேன் என்றும்! – இளமையை



ilamaiyai iyesuvukkub parisakkuvom

ilamaiyai iyesuvukkub parisakkuvom! – nam
vazh nalai avarukku paliyakkuvom!
jeeva paliyakkuvom!

1. mutamakkum pavaththukku mudivukadduvom
muzhu sinththaiyaiyum iyesuvukku urimaiyakkuvom!
udalalum ullaththalum aarathibbom! ini..
orubothum ulakukku adimaibpadom! – ilamaiyai

2. dhalladum muzhangkalai uunrakkadduvom
dhavarana parrukalai veddi erivom
arivodum unarvodum bin parruvom! ini..
ulamara iyesuvil nam anbu kuruvom – ilamaiyai

3. palipatathdhanal kondu sinththaiyaith theாdum!
thuthibadum analkonda ullamtharum!
vizivaiththu ethir nokkum ennaibbarum! ini..
pathivaka ummil nan nilaibben endrum! – ilamaiyai